search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரிக்ஸ் உச்சி மாநாடு"

    தென் ஆப்பிரிக்காவில் பிரிக்ஸ் மாநாட்டை முடித்துக் கொண்டு புறபட்ட பிரதமர் மோடி இன்று அதிகாலை இந்தியா வந்தடைந்தார். #PMModi #BRICSSummit
    புதுடெல்லி:

    ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, உகாண்டா, ருவாண்டா நாடுகளின் தலைவர்களை சந்தித்து இந்தியாவுடனான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். 

    இந்த ஆலோசனையின் போது இந்தியாவுக்கும் மேற்கண்ட இருநாடுகளுக்கும் இடையே பல்வேறு புதிய ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.

    தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகரில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். பிரிக்ஸ் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிரேசில், ரஷியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்க நாட்டு தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். மாநாடு முடிந்த பின்னர், இந்த நாடுகளின் தலைவர்களை மோடி தனித்தனியாக சந்தித்து பேசினார்.

    தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின், அர்ஜெண்டினா அதிபர் மவுரிசியோ மாக்ரி ஆகியோரை மோடி சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இறுதியாக, நேற்று மாலை துருக்கி அதிபர் ரெசெப் எர்டோகன்-ஐ சந்தித்த பிரதமர் மோடி இரண்டாவது முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர், தனி விமானம் மூலம் ஜோகன்னஸ்பெர்க் நகரில் இருந்து புதுடெல்லி நோக்கி புறப்பட்டார்.

    இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா உள்பட மூன்று நாடுகளின் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, இன்று அதிகாலை டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்தார் பிரதமர் மோடி.

    விமான நிலையத்தில் வந்திறங்கிய மோடியை, வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் மலர்க் கொத்து கொடுத்து வரவேற்றார். #PMModi #BRICSSummit #Johannesburg
    தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகரில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி ரஷிய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்தார். #PMModi #BRICS #Putin
    ஜொகன்னஸ்பெர்க்:

    ஆப்பிரிக்க நாடுகளான ருவாண்டா, உகாண்டா, தென் ஆப்பிரிக்கா ஆகியவற்றில் 5 நாட்கள் சுற்றுப்பயணம்  மேற்கொண்டுள்ள பிரதமர் 

    மோடி, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகரில் இன்று நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார்.

    அப்போது அவர் பேசுகையில், சிறந்த உலகை உருவாக்க தொழில்துறை தொழில்நுட்பமும், பலதரப்பட்ட ஒத்துழைப்பும் தேவை என  தெரிவித்தார்.

    அதன் பின்னர், பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த பல்வேறு நாட்டு அதிபர்களை பிரதமர் மோடி தனித்தனியாக சந்தித்து 
    பேசினார்.

    அதன் ஒரு பகுதியாக, ரஷிய அதிபர் விளாடிமிர் புடினை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் கூறுகையில், புடினுடனான சந்திப்பு மிகுந்த பயனுள்ளதாக அமைந்தது. இரு நாட்டு உறவுகள் மேலும் வலுப்படும். பல துறைகளில் இருவரும் இணைந்து செயல்பட்டு வருகிறோம் என பதிவிட்டுள்ளார். #PMModi #BRICS #PMModi #BRICS #Putin 
    தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகரில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி சீன அதிபர் ஜிங் பிங்கை சந்தித்தார். #PMModi #BRICS #XiJinping
    ஜொகன்னஸ்பெர்க்:

    ஆப்பிரிக்க நாடுகளான ருவாண்டா, உகாண்டா, தென் ஆப்பிரிக்கா ஆகியவற்றில் 5 நாட்கள் சுற்றுப்பயணம்  மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகரில் இன்று நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார்.

    அப்போது அவர் பேசுகையில், சிறந்த உலகை உருவாக்க தொழில்துறை தொழில்நுட்பமும், பலதரப்பட்ட ஒத்துழைப்பும் தேவை என தெரிவித்தார்.

    அதன் பின்னர், பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த பல்வேறு நாட்டு அதிபர்களை பிரதமர் மோடி தனித்தனியாக சந்தித்து பேசினார். அதன் ஒரு பகுதியாக, சீன அதிபர் ஜி ஜிங் பிங்கை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். கடந்த 4 மாதங்களில் நடைபெற்ற மூன்றாவது சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
     #PMModi #BRICS #XiJinping 
    பிரிக்ஸ் உச்சி மாட்டில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்கா செல்லும் பிரதமர் மோடி வழியில் ருவாண்டா, உகாண்டா நாடுகளின் அதிபர்களை சந்திக்கிறார். #ModiRwandavisit #ModiUgandavisit
    புதுடெல்லி:

    ஜூலை 25-ம் தேதி தொடங்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தென்னாப்பிரிக்கா புறப்பட்டு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ருவாண்டா நாட்டுக்கு நாளை (திங்கட்கிழமை) செல்கிறார். 

    ருவாண்டா அதிபர் பால் ககாமே உள்ளிட்ட தலைவர்களை அவர் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். ருவாண்டா அதிபரின் தேசிய சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் ‘வீட்டுக்கு ஒரு பசு’ திட்ட விழாவில் அவர் கலந்து கொள்கிறார்.

    அந்நாட்டின் பாரம்பரிய மரபுகளின்படி, பசு மாடுகளை பரிசாக அளித்து அன்பை ஏற்படுத்தி கொள்வது வழக்கம். அவ்வகையில் இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்படும் 200 பசு மாடுகளை ருவாண்டா விவசாயிகளுக்கு பிரதமர் மோடி பரிசாக அளிக்கிறார். பின்னர் 24-ம் தேதி உகாண்டா நாட்டுக்கு செல்கிறார்.

    சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் உகாண்டாவுக்கு வரும் முதல் இந்திய தலைவரான மோடிக்கு எண்ட்டேபி நகரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனி விருந்து அளிக்கிறார். உகாண்டா பாராளுமன்றத்தில் சிறப்புரையாற்றும் அவர் அங்கிருந்து ஜோஹனஸ்பர்க் நகருக்கு சென்று 25-ம் தேதி தொடங்கும் உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். #ModiRwandavisit #ModiUgandavisit 
    அரசுமுறை பயணமாக ருவாண்டா, உகாண்டா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு அடுத்த வாரம் செல்லும் பிரதமர் மோடி, பிரிக்ஸ் மாநாட்டிலும் பங்கேற்க உள்ளார் என வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. #Modi #BRICSSummit
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக ருவாண்டா, உகாண்டா மற்றும் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு நான்கு நாள் சுற்றுப்பயணம் செய்கிறார். ஜூலை 23ம் தேதி இந்தியாவில் இருந்து புறப்படும் அவர் ஜூலை 27ம் தேதி அங்கிருந்து இந்தியா திரும்புகிறார்.

    இந்த சுற்றுப்பயணத்தில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார் என வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி, கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டா நாட்டுக்கு வரும் 24-ம் தேதி செல்கிறார். அங்கு எண்ட்டேபி நகரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் மோடிக்கு உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனி விருந்து அளிக்கிறார். அதைத் தொடர்ந்து, வரும் 25-ம் தேதி உகாண்டா பாராளுமன்றத்தில் சிறப்புரையாற்ற உள்ளார். #Modi #BRICSSummit
    ×